Friday, January 14, 2011

Tele Medicine

தொலை மருத்துவம் என்பது முறைமை (System) ஒன்றின் மூலம் நோயாளியை ஆராய்தல், செயற்பாடுகளை அவதானித்து அதற்கேற்ப முகாமைத்துவம் செய்தல் போன்றவையாகும். நோயாளி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் மருத்துவ நிபுணர்களால் அவதானிக்கப்பட்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கக்கூடியதாக இருக்கும். நோயாளியின் இருப்பிடம், மற்றும் நோயாளி தொடர்பான தகவல்கள் எங்கிருந்துபெற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை. இதன்மூலம் தற்போது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சில விடயங்களை நோயாளி வீட்டில் வைத்தவாரே மேற்கொள்ளக்கூடிய வகையில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தகவல்களை அனுப்பக் கூடியதொழில்நுட்பங்களை கொண்டிருக்கின்றது. இதன்மூலம் தரமான சிறந்த நோய்க் குணப்படுத்தும் வழிவகைகளை குறைந்த செலவில் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

No comments:

Post a Comment