Friday, January 14, 2011

Computer Axial Tomography (CAT) Scan

CAT scan ஆனது பல X - கதிர்களின் ஒன்று சேர்க்கையில் உருவானதும், கணனியினால் கட்டுப்படுத்தப்பட்டதுமான படங்களை கணினி மூலம் குறுக்காகப் பகுதிகளாக்கப்பட்ட பின் அவை உள்ளக உறுப்புக்களை முப்பரிமாண தோற்றத்தைக் கொண்டு நியதிக்கு மாறானவற்றை அடையாளப்படுத்தவும் உதவும். அதேவேளை, நிணநீர் அல்லது உடலின் உட்(தூரப்) பகுதிகளிலுள்ள மென்சவ்வுகளின் நிலைமாற்றம் போன்றவற்றைக் கவனிப்பதற்கு குறிப்பிடத்தக்ககளவு சரியாக காட்டக் கூடியது.
CT படங்களில் மூலம் மென்சவ்வு வகைகள் நுரையீரல், எழும்பு மற்றும் குருதி நாடி நாளங்கள் என்பவற்றை மிகத் தெளிவாகக் காட்டுவதால் உடம்பின் கட்டிகள் இருக்கின்றவா என்பதைக் கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. விசேட உபகரணங்களையும், நிபுணர்களையும் கொண்டு CT scan படங்களை அவதானிப்பதால் புற்றுநோய், இதய நோய், உடல் உட்காயங்கள், தொற்று நோய், தசை மற்றும் மண்டையோட்டுடன் தொடர்புபட்ட நோய்கள் போன்றவற்றையும் கண்டறியக் கூடியதாகவுள்ளது. இது நோயாளியின் தோழமைமிகுந்த சிறியளவு வெப்பக் கதிர் கொண்ட கருவியாகும்.

No comments:

Post a Comment