Saturday, January 15, 2011

பாடசாலை தகவல் முகாமைத்துவ முறைமை

School Information Management System
ஒரு நிறுவனத்தின் organization அல்லது நிறுவனத்தின் ஒரு அலகின் (மனித, நிதி, சாதன, அறிவுசார், கட்புலனாகா வளங்கள் முறையாக கையாள்வதும் விரிதாக்கம் செய்வதும் அவற்றை சரியான வழிகாட்டலின் கீழ் முன்னெடுத்துச் செல்லும் ஒரு முறையாகும். திட்டமிடல்; (Planning)இ ஒழுங்கமைத்தல் (Organizing), தலைமை வகித்தல் / முன்னெடுத்துச் செல்லல். (Leading), இணைத்தல் (Coordinating) மற்றும் கட்டுப்படுத்தல் (Controlling). பாடசாலை தகவல் முகாமைத்துவ முறைமையானது (School Information Management System) பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை தன்னியக்கமாக்கும் (automation) ஒரு செயற்பாடாகும். இது பாடசாலையின் நிர்வாகத்திற்குத் தேவையான தகவல்களை கையாளுவதற்கு உதவுகின்றது. இந்த மென்பொருளானது தரவடிப்படைக்கான (database) இடைமுகம் (interfaces) தரவுள்ளீடுகள் (database) தகவல்களை பெறல் மற்றும் print செய்தல் போன்ற செயற்பாடுகளை வழங்குகின்றது. இவ்வாறான முறைமை கீழ்வருவனவற்றுக்குத் செயற்படுத்த துணைபுரிகின்றது.
  • மாணவர் பதிவு - Student registration
  • வகுப்பு மற்றும் ஆசிரியர் நேரசூசி தயாரித்தல்
  • உத்தியோகத்தர் தகவல் (லீவு, சம்பளம், ஏனையவை...)
  • Inventory நிர்வகித்தல்
  • மாணவர்களது வரவு அறிக்கை
  • நற்சான்றிதழ் வழங்கல்
  • வசதிக் கட்டணம் தர உள்ளீடு cash book ஏனையவை மென்பொருளினூடாக உருவாக்கப்பட்ட தெளிவான அறிக்கைகளுடாக வழமையான தொடர்ச்சியாக தேவைப்படும் தகவல்கள் பாடசாலை நிர்வாகத்தினால் பெற்றுக் கொள்ள முடியும். இவை பாடசாலை முகாமைத்துவத்தின் வினைத்திறனையும் தரத்தையும்; மேம்ப்படுத்தும்.

No comments:

Post a Comment