Friday, January 14, 2011

e-Learning இலகுவான access

e-Learning ஆனது மாணவர்கள் அல்லது கற்போரிமையே பல தகவல்களை வழங்குவதுடன் குறித்த இடம், குறித்த நேரம் போன்ற தடைகள் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டு எந்நேரமும் எவ்விடத்திலும் access செய்து கொள்ளக் கூடிய வசதிகளை வழங்குகின்றது. மாணவர்கள் ஒருவர் தாம் இருக்கும் இடத்திலிருந்தே பாடங்களைக் கற்றுக் கொள்ளக் கூடியதாயிருக்கும். ஆனேகமான சந்தர்ப்பங்களில் குறிப்பாக விசேடமாக CBT, CD-ROM சாதனத்தினூடாக வழங்கும் போது அவை கட்பல செவிப்புல வளங்கள் நிறைந்த எல்ஊடகத் தகவல் பரிமாற்றமாக அமைகின்றது Interactive சூழலைக் கொண்ட இவ் e-Learning ஆனது பின்னூட்டல் (feedback) மற்றும் மதிப்பீடுகளையும் கொண்டிருப்பதோடு, மாணவரது முன்னேற்றத்தையும் அடைவு மட்டத்தினையும் கணிப்பிட்டுக் கொள்ளத் துணை புரிகின்றது.

e-Learning என்றால் என்ன?

e-Learning பரந்தளவிலான போதனை சாதனங்களை கொண்டு CD-ROM அல்லது DVD, Local area network (LAN) மற்றும் இணையம் Internet போன்ற பல்வேறு ஊடகங்களினூடாக வழங்கப்படும் போதனை முறையாகும். இது – Computer Based Training (CBT), Web-Based Training (WBT), Electronic Performance Support Systems (EPSS), கற்றல் மற்றும் online tutorials ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதனை இலகுவாக access செய்து கொள்கிறது மாணவர்களுக்கு ஒரு நன்மை பயக்கும் விடயமாகும். e-Learning சாதனங்களை வடிவமைக்கும் போது எடுத்துக்காட்டான பல விடயங்கள் தரமான முறையான அணுகுமுறைகளை e-Learning சாதனங்களின் விருத்தியின் போது மேற்கொள்ளப்படுகின்றது

தொலை மருத்துவத்தின் நன்மைகளும், சவால்களும்

நன்மைகள்

• நகரும் நோய்த் தோற்ற வழிகளை மேற்கொள்ளுதலும் சகலவித வைத்திய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதலும்.

• சிகிச்சை வசதிகளை மேம்படுத்தல்.

• அரிதான உபகரணங்களைத் திறமையாகக் கையாளுதல்.

• தொலைவிலுள்ள வைத்திய நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளல்.
  • Tele-monitoring
  • Tele-video conferencing
  • Transmission and Equipment

சவால்கள்

• வைத்தியரின் அனுமதிப்பத்திரம், பொறுப்பு மற்றும் நோயாளியின் நம்பகத் தன்மை போன்றவை (நாட்டிற்குநாடு வேறுபடும் அனுமதி முறைகள்)

• பொறுப்பு :- சட்ட நடவடிக்கை எந்த நாட்டில் யாருக்கு மேற்கொள்ளுதல், வைத்தியருக்கா, வைத்திய நிபுணருக்கான போன்ற விடயங்கள்.

• செலவு முக்கிய தடையாகவுள்ளது. கிராமப் புறங்களுக்கு இவ்வசதி வழங்குவதற்கு கூடுதலான செலவு ஏற்படும்.

• தகவல் வரிவர்த்தனை செலவு கூடியது.

• தொலை மருத்துவ வசதி பெற்றுக் கொண்டதற்கு கட்டணம் செலுத்துவதிலுள்ள சிக்கல்கள்.

தொலை மருத்துவப் பிரயோகம்

1. வைத்திய சிகிச்சைகளை மேற்கொள்ளுதல்.நோயாளி தொடர்பான அறிவூட்டல், நிர்வகித்தல் ஆய்வுகளை மேற்கொள்ளல், நோயறிகுறிகளை அறிந்து ஷகொள்ளல் என்பவற்றுடன் தொடர்பான விடயங்களைக் கொண்டு நிபுணத்துவ ஆலோசனைகளை சாதாரண வைத்தியர்கள் தொலைவிலுள்ள நிபுணத்துவர்களுடன் கலந்துரையாடி பரிகாரமளித்தல்.
2. நோயாளியின் தகவல்களைக் கொண்டு அவரின் நிலையை தொலைவிலிருந்து அவதானித்தல்.
3. மருவத்துவக் கருத்தரங்குகளில் தொலைவிலுள்ளவர்கள் பங்குகொள்ளல்.
4. பல இடங்களில் இருந்து தகவல்களைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்ளல்.
5. Internet மூலமாக மருத்துவ தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.

Tele Medicine

தொலை மருத்துவம் என்பது முறைமை (System) ஒன்றின் மூலம் நோயாளியை ஆராய்தல், செயற்பாடுகளை அவதானித்து அதற்கேற்ப முகாமைத்துவம் செய்தல் போன்றவையாகும். நோயாளி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் மருத்துவ நிபுணர்களால் அவதானிக்கப்பட்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கக்கூடியதாக இருக்கும். நோயாளியின் இருப்பிடம், மற்றும் நோயாளி தொடர்பான தகவல்கள் எங்கிருந்துபெற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை. இதன்மூலம் தற்போது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சில விடயங்களை நோயாளி வீட்டில் வைத்தவாரே மேற்கொள்ளக்கூடிய வகையில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தகவல்களை அனுப்பக் கூடியதொழில்நுட்பங்களை கொண்டிருக்கின்றது. இதன்மூலம் தரமான சிறந்த நோய்க் குணப்படுத்தும் வழிவகைகளை குறைந்த செலவில் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

(EEG - electro encephalo graph)

மூளையின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக முதலாவதாக உருவாக்கப்பட்ட இக்கருவி மண்டையோட்டிற்கு வெளியாக பொருத்தப்படுவதால் இன்றும்மிகவும் பிரயோசனமுள்ளதாகவே இருக்கின்றது. இக்கருவி பெற்றுக் கொள்ளும் சமிஞ்சைகள் அதில்பொருத்தப்பட்டுள்ள பேனை மூலம் ஒருவர் உறக்கத்தில் நினைவற்றநிலையில் அல்லது விளித்திருக்கும் நிலை என்பவற்றை அறிந்து கொள்ளலாம். மூலையின் கட்டமைப்பை அவதானிக்க முடியாமை ஒரு குறைபாடாகும்.

Computer Axial Tomography (CAT) Scan

CAT scan ஆனது பல X - கதிர்களின் ஒன்று சேர்க்கையில் உருவானதும், கணனியினால் கட்டுப்படுத்தப்பட்டதுமான படங்களை கணினி மூலம் குறுக்காகப் பகுதிகளாக்கப்பட்ட பின் அவை உள்ளக உறுப்புக்களை முப்பரிமாண தோற்றத்தைக் கொண்டு நியதிக்கு மாறானவற்றை அடையாளப்படுத்தவும் உதவும். அதேவேளை, நிணநீர் அல்லது உடலின் உட்(தூரப்) பகுதிகளிலுள்ள மென்சவ்வுகளின் நிலைமாற்றம் போன்றவற்றைக் கவனிப்பதற்கு குறிப்பிடத்தக்ககளவு சரியாக காட்டக் கூடியது.
CT படங்களில் மூலம் மென்சவ்வு வகைகள் நுரையீரல், எழும்பு மற்றும் குருதி நாடி நாளங்கள் என்பவற்றை மிகத் தெளிவாகக் காட்டுவதால் உடம்பின் கட்டிகள் இருக்கின்றவா என்பதைக் கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. விசேட உபகரணங்களையும், நிபுணர்களையும் கொண்டு CT scan படங்களை அவதானிப்பதால் புற்றுநோய், இதய நோய், உடல் உட்காயங்கள், தொற்று நோய், தசை மற்றும் மண்டையோட்டுடன் தொடர்புபட்ட நோய்கள் போன்றவற்றையும் கண்டறியக் கூடியதாகவுள்ளது. இது நோயாளியின் தோழமைமிகுந்த சிறியளவு வெப்பக் கதிர் கொண்ட கருவியாகும்.